புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இளகியமனம் கொண்டவர்கள் காணொளியைப் பார்க்காதீர்கள் ஆனால் கட்டாயம் இந்த கட்டுரையை வாசியுங்கள்.மரணத்தின் பின் சொர்க்கமா, நரகமா? இன்னும் யாராலும் விடைகாணப்படாத கேள்வி, இதில் மதவாதிகளால் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு ஆயுதம். மனிதாபிமானம் மிக்க நல்ல
மனிதர்களின் விடை சொர்க்கமும், நரகமும் நீ செய்யும் செயலால் வாழும்போதே காணலாம்.

சாவு: உடல்பாகங்களின் செயல் இழந்து உடலில் எந்த செயற்பாடும் அற்ற நிலையை சாவு என்கிறோம்.மூளை செயல் இழந்து உடல் பாகங்களில் அசைவில்லாமல் இதயத் துடிப்புடன் சுவாசித்துக்கொடிருப்பதை கோமா நிலை என்றிறார்கள். உடலில் உயிர் எங்கிருக்கின்றது என்பதை இன்னும் யாராலும் கண்டறியப்படவில்லை, உடல் பாகங்கள் பல வற்றை மீழ் பொருத்தும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் இறந்தவருக்கு உயிரை மீழச்செலுத்தும் வளியை இன்னமும் கட்டுபிடிக்கவில்லை.

விலங்கினங்களில் இருந்து ஆறறிவு படைத்த விலங்கான மனிதன் வரை சாவு என்பது ஒரே வகையில் தான் இருக்கின்றது. இந்த உயிரைத் தான் பேய் என்று சொல்கிறார்கள்.

இந்த பேயை வைத்து புத்திசாலிகள் உளைத்த வண்ணமே இருக்கின்றனர்.

அது சிறு தொழிலான பெய் விரட்டல் ஆசாமிகளும், பெரிய முதலீட்டில் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனங்களும் மக்களை ஏய்த்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. பூமியில் ஒரு உயிர் பல பிறப்புக்களை எடுக்கின்றன என்பது சில மதங்களின் கருத்து.

விபத்தில் அவலச் சாவடைந்தவர்கள் பேயாய் அலைகிறார்கள் என்பது பேயை வைத்து பிளைப்பவர்களினதும், அதை நம்பும் முட்டாள்கனினதும் கருத்து. மூடிய கையிற்கு மதிப்பதிகம் என்பார்கள்.

அதுபோல் தான் விடை காணப்படாத சாவிற்கும் கண்ணுக்கு தெரியாத உயிரிற்கும், செத்தபின் உருவாக்கப்படும் பேயிற்கும் இந்த உலகில் இன்றிருக்கும் மதிப்பு. பேய்!

உயிர் என்பதும் சாவு என்பதும் விலங்குகளுக்கும் ஆறறிவு படைத்த மனிதனுக்கும் ஒன்றாக இருக்கும் போது பேய் என்பதும் ஒன்றாகத்தான் இருக்கும் அல்லாவா.

அவலச்சாவடையும் மனிதன் பேயாக வருகின்றான் என்றால் அவலச் சாவடையும் மிருகங்களும் பேயாக அலையும் என்பது தானே நிஜம். அப்படியானால் மாமிசக் கடைகளில் எல்லாம் மிருகங்களின் பேய்கள் அல்லவா குடியிருக்க வேண்டும். KFCஇல் செத்த கோழிகளின் பேய்கள் அல்லவா அலைய வேண்டும்.

அந்த கோளிகளின் ஆவியை யாராவது கண்டிருக்கின்றீர்களா? உணவுக்காக கொல்லப்படும் விலங்குகள் எவையுமே இயற்கையாக இறந்தவை இல்லை அல்லவா, அவை அனைத்தும் அவலச் சாவை தான் கண்டிருக்கின்றன. அப்போது அவை எல்லாம் பேயாகத் தானே அலைய வேண்டும். அந்த பேயை விரட்டும் ஆசாமிகள் யார்?

இந்த சாவு, உயிர், பேய் என்னும் மாயத்தாலும், நல்ல வழிநடத்லுக்காகவும் உருவாக்கப்பட்டவை தான் மதங்கள், ஆனால் இன்று நல்வழிப்படுத்தல் என்பதை மறந்து அவை உழைப்பிற்காகவும், தமது பலத்தைக் காண்பிப்பதற்காகவும் ஏமாற்றுக்காரர்களால் பயன் படுத்தப்படுகின்றது.

அனைத்து உயிர்களும் ஒன்று அனைவருக்கும் வலி என்பது ஒன்று. எனக்கு வலிப்பது போல் தான் மற்றவருக்கும், நான் சாவை காண்பது போல்தான் மற்றவருக்கும் எனும் மனம் இருக்குமானால் நீ வாழும் இந்தப் பிறப்பும் இந்த உலகமும் உனக்கு சொர்க்கமாக அமையும், சாவு, உயிர், பேய், கடவுள் எனும் தெரியாத மாயைகளை எண்ணி பயம் கொள்ளத் தேவையில்லை அல்லவா.

இரக்க குணத்தையும், மனிதாபிமானத்தையும் ஒவ்வொருவரும் தமக்குள்ளும், இயன்றளவு மற்றவர்களுக்கும் உணர்த்துவார்களாக இருந்தால் இவ் உலகம் சொர்க்கமாக மாறிவிடும்.

இந்த கட்டுரையை நாஸ்திகன் போல் எழுதி இருந்தாலும் நான் கடவுளை நாம்புபவன், கட+உள் உன்னுள் கடந்து சிந்தி எனும் கடவுளை.

இதில் நான் சாவில் இருந்து பேய், மதம் என்பவற்றை தொட்டு எழுதி உள்ளேன். உங்கள் எதிர்க் கருத்துக்களையும் ஆதரவுக் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

இந்த காணெளியைப் பார்க்கும் போது சிந்தனை ஆற்றல் மிக்க ஆறு அறிவை கொண்ட மனித விலங்கு கூட இறந்த பின் மற்றய விலங்குகள் போல் தான் என்பது புரிகின்றது.

இந்த காணெளியின் தாக்கம் தான் இந்த புலம்பல் கட்டுரைக்கு காரணம்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top