புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அந்தக்காலத்தில் பல முன்னணி இயக்குனர்கள் தமது கதையுடன் நடிகர் விஜய்யை அணுகியிருந்தனர், ஆனாலும் கால்ஷீட் பிரச்சனை , கதை பிடிக்காத காரணத்தினால் விஜய் அவற்றை நிராகரித்திருந்தார், பின்னாளில் அத்தனை படமும் செம ஹிட்டாகியது.
*முதல்வன்
ரஜினிகாந்துக்காக எழுதப்பட்டது முதல்வன் படத்தின் கதை. அதில் ரஜினி நடிக்க முடியாமல் போனதையடுத்து அந்த வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அதில் நடிக்க முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டார். அதன் பிறகு ஷங்கர் அந்த படத்தை அர்ஜுனை வைத்து எடுத்து ரிலீஸ் செய்தார்.
*உன்னை நினைத்து
விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா, லைலா நடித்த சூப்பர் ஹிட் படம் உன்னை நினைத்து. இதில் நடிக்க விஜயைத் தான் முதலில் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுக்கவே சூர்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
*தூள்
விக்ரம், ஜோதிகா, ரீமா சென் நடித்து கண்டமேனிக்கு ஓடிய படம் தூள். இந்த படத்தில் நடிக்குமாறு இயக்குனர் தரணி விஜயிடம் தான் முதலில் சென்றுள்ளார். கதை பிடிக்காமல் விஜய் மறுத்த பிறகே விக்ரம் நடித்துள்ளார்.
*ஆட்டோகிராப்
சேரன் தானே இயக்கி ஹீரோவாக நடித்த படம் ஆட்டோகிராப். படமும் சரி, பாடல்களும் சரி சூப்பர் ஹிட்டானது. தனது ஆட்டோகிராபில் நடிக்குமாறு சேரன் விஜயைத் தான் கேட்டுள்ளார். ஆனால் அவர் வருடக் கணக்கில் கால்ஷீட் கேட்டதால் விஜய் நடிக்க மறுத்துவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top