யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரே இது உங்களின் கவனத்திற்கு !
யாழ். போதனா வைத்தியசாலையில் விடுதிகளுக்கு வெளியே கட்டில்கள் இன்றி நோயாளிகள் தரையில் இருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். யாழ். குடாவில் தற்போது தொற்று நோய் மற்றும் தொற்றா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் வீதமும் அதிகரித்துள்ளது. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையின் விடுதிகளில் இடப்பற்றாக்குறை காணப்படுவதனால் நோயாளர்கள் விடுதிகளுக்கு வெளியே உள்ள நடைபாதைகளில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த நோயாளிகள் பல தரப்பட்ட நோய்கள் காரணமாக வைத்தியசாலைக்கு வந்திருக்கலாம் அவர்கள் தரையில் தங்க வைக்கப்பட்டிருப்பது என்பது நிர்வாகத்தினருடைய பொறுப்பற்ற தன்மையினைக் காட்டுகின்றது. இதனால் விடுதிக்கு வெளியே தரையில் இருக்கும் நோயாளிகளும் , விடுதிக்கு வருபவர்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவற்றை வைத்தியசாலை நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
0 கருத்து:
கருத்துரையிடுக