புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணமாகி ஒரே ஆண்டில் கணவரை விவாகரத்து செய்கிறார் மம்தா மோகன்தாஸ். அடுத்த மாதம் விவாகரத்து வழக்கு தொடர்கிறார். சிவப்பதிகாரம்குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.
தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்கலில் நடித்துள்ளார். இப்போதும் கைவசம் அரை டஜன் மலையாளப் படங்கள் உள்ளன. இவருக்கும் கேரள தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும், கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக இருப்பதாக கூறிவந்தார்.மம்தா மோகன்தாஸ் ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு பிறகு குணமானார். கணவர் பிரஜித் தந்த தைரியத்தாலேயே புற்று நோயை தைரியமாக எதிர் கொண்டு மீண்டேன் என்றும் கூறிவந்தார். ஆனால் தற்போது திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
ஒரு வருடத்திலேயே திருமண முறிவு ஏற்பட்டுள்ளது. கணவரை விவாகரத்து செய்ய மம்தா மோகன்தாஸ் முடிவு செய்துள்ளார். இதையடுத்து வக்கீல்களை வீட்டுக்கு அழைத்து கோர்ட்டில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்வது குறித்து ஆலோசித்தார். இன்னும் ஓரிரு வாரத்தில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top