புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரண்டு ஹீரோக்கள் ஒன்றிணைந்து நடிக்கும் நல்ல பழக்கம் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டது. பாலிவூட்டில் இந்த பழக்கம் சரளமாகவே

 காணப்படுகிறது. அதன் வகையில் சீயான் விக்ரமும், ஜீவாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘டேவிட்’.
ஒரு நாட்டில் இருவேறு இடங்களில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரே டேவிட் என்ற பெயர் கொண்ட இரண்டு ஹீரோக்களைப் பற்றிய புதுமையான கதைதான் இந்தப் படம். இந்த இருவரும் எடுத்து வைக்கும் ஒரு அடி அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றி விடுகிறது.
மும்பையில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து 18 வயதான டேவிட் என்ற இசைக்கலைஞனைப் பற்றியும், கோவாவில் உள்ள கடற்கரையோரம் உள்ள மீனவ குடும்பத்தில் பிறந்த 35 வயதான டேவிட் என்பவனுடைய கதையும் ஒரே படத்தில் சொல்லப்படுகிறது. இதில் மும்பையில் பிறந்த இசைக்கலைஞன் டேவிட்டாக ஜீவாவும், கோவாவில் மீனவக்குடும்பத்தில் பிறந்த டேவிட்டாக விக்ரமும் நடித்துள்ளனர்.
பொதுவாக எல்லா படங்களிலும் அதிகபட்சம் இரண்டு மியூசிக் டைரக்டர்கள் இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனிருத் உட்பட சுமார் 5 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பிவிட்டது

 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top