புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஏழு மாத குழந்தையின் கன்னத்திலிருந்து 2 அங்குலம் நீளமான சிறகு ஒன்று சத்திரசிகிச்சையினூடாக அகற்றப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவின் கானாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மாயா விட்டிங்கடன் என்ற 7 மாத பெண்குழந்தையின் கன்னத்திலிருந்தே இவ்வாறு சிறகு அகற்றப்பட்டுள்ளது.
 குறித்த குழந்தையின் கன்னத்தில் ஒரு பகுதி சிவப்பு நிறமாக வீங்கி காணப்பட்டுள்ளது. பருவாக இருக்கலாமென பெற்றோர் அதனை அலட்சியப்படுத்திவிட ஓரிரு நாளில் குறித்த இடம் பெரிதாக வீக்கமடைந்துள்ளது.

குழந்தையின் பெற்றோர்களான எரோன் மற்றும் எம்மா விட்டிங்கடன் இருவரும் உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றுள்ளனர்.

வைத்தியர்கள் குழந்தையின் பருவை உடைத்துப் பார்தத்துடன் அவ்விடத்தை சுற்றி அடையாளமொன்றை வரைந்தனர். குறித்த இடம் தொடர்ந்தும் வீங்க தொடங்கியது.

பரு உடைக்கப்பட்ட இடத்திலிருந்து குச்சியை போன்ற ஒன்று வெளிப்பட்டதை வைத்தியர் அவதானித்துள்ளார். உடனடியாக அதனை இழுத்தபோது அது இரண்டு அங்குல நீளமான சிறகு என்பதை வைத்தியர்கள் கண்டறிந்துள்ளார்.

குழந்தை இதனை விழுங்கியிருக்க வேண்டும் அல்லது நாசியினூடாக சென்றிருக்க வேண்டும். அது கன்னத்தில் அல்லது தொண்டையில் துளையிட்டு கன்னத்திற்கு நகர்ந்து இந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என குழந்தையின் தாயான விட்டங்கடன் தெரிவித்துள்ளார்.

தனது 20 வருட வைத்திய அனுபவத்தில் இவ்வாறான அனுபவங்களை தான் எதிர்கொண்டதில்லை என வைத்தியர் ஆர்.என்.சான்ட்ரா மத்தீஸ் தெரிவித்துள்ளார்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top