புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் 55 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கொலை செய்தவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சைகாமோர் பகுதியை சேர்ந்தவள் மரியா ரிடுல்ப்.


ஏழு வயதான சிறுமி மரியா கடந்த 1957ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போய்விட்டாள். அதன் பின் ஐந்து மாதங்களுக்கு பிறகு சிறுமியின் சடலம் வயலில் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜேக் மெக்குலோ என்பவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் பொலிஸ் அதிகாரியாக மாறி விட்ட ஜேக், சிறுமியை கொலை செய்ததை மறைத்து விட்டார்.

அமெரிக்க புலனாய்வுத்துறையினர் இந்த வழக்கை பல்வேறு விதங்களில் விசாரித்த போது, ஜேக் மீதான சந்தேகம் வலுத்தது.

இதனையடுத்து சிறுமி மரியாவை கடத்தி சென்று கொன்றது உறுதியானது. இதனை தொடர்ந்து இலினாய்ஸ் நீதிமன்றம் ஜேக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் தற்போது ஜேக்குக்கு 73 வயதாவதால், இவருக்கு மரண தண்டனை கொடுப்பதா என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சட்டத்துறை நிபுணர்கள் குறிப்பிடுகையில், நாங்கள் வயதான நபருக்கு தண்டனை கொடுக்கவில்லை. அவர் செய்த கொடூர செயலுக்கு தான் தண்டனை கொடுத்துள்ளோம் என்றனர்.

இந்நிலையில் இத்தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய ஜேக் திட்டமிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top