புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலகமே வியக்கும் ஒரு நாள் இன்று. அது 12.12.12. இனி இதுபோன்ற ஒரு நாள் அடுத்த 1000-ம் ஆண்டுகள் கழித்து தான் வரும். அதனால் இன்றைய நாளை உலகமே சிறப்பாக கொண்டாடுகிறது. பலர் இன்று திருமணம் செய்து கொள்ளவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஆர்வமாய் இருக்கின்றனர். அப்படிபட்ட இன்றைய நாளில் நம்மு‌டைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாளும் கூட. மரணத்தை
எட்டிப்பார்த்துவிட்டு வந்துள்ள ரஜினிக்கு இந்த பிறந்தநாள் ரொம்பவே விஷேமானது. 12+12+12=36. அவர் திரையுலகிற்கு வந்து 36 ஆண்டுகள், இந்த 36 திருப்பிபோட்டால் 63. அது அவரின் வயது.

இப்படி பல சிறப்புகள் உடைய இந்த பிறந்தநாளில் ரசிகர்களுக்காக, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினி அளித்த பிறந்தநாள் பேட்டி இதோ, சிறப்பான இந்நாளில் எனது பிறந்தநாள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் அவர்களின் பெற்றோரை வழிபடும் நாளாக கொண்டாடினால் இன்னும் சந்தோஷப்படுவேன். அப்பவும், இப்பவும், எப்பவும் சொல்வேன், என்னைவிட பெற்றோர்கள் தான் முக்கியம் என்றார். மேலும் இப்போது தான் நடித்து வரும் கோச்சடையான் படம் பற்றி கூறுகையில், கோச்சடையான் படம் இன்றைய சினிமா தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம். இப்படம் மட்டும் வெற்றிப்பெற்றால் இனி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச படங்களும் இதே தொழில்நுட்பத்தில் வெளிவந்து வெற்றி பெறலாம் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top