இன்று தமிழ் திரையுலகம் என்றால் சட்டென ஞாபகம் வந்து சிறு பிள்ளை முதல் நரை முதியவர் வரை சொல்லும் ரஜினிகாந் அவர்களின் பிறந்த தினம்.
சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!சூப்பர் ஸ்டார் ரஜினியின் 63வது பிறந்த நாள் விழா சரத்குமார் தலைமையில் நடக்கிறது.
இதில் நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் பங்கேற்கின்றனர். கோடம்பாக்கத்தின் எவர்கிரீன் கவர்ச்சிப் புயல் நமீதா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
சென்னை ரசிகர்கள் சார்பில் நடக்கும் இந்த விழா, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் (டிசம்பர் 13 வியாழக்கிழமை மாலை) சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதுவரை காணாத அளவு பிரமாண்ட கூட்டத்துடன் விழா நடக்கவிருக்கிறது. அனைத்து மாவட்ட ரசிகர்களும் அழைப்பிதழுடன் வரவிருக்கிறார்கள்.
வழக்கமாக இந்த மாதிரி விழாக்களுக்கு அனுமதி வழங்க யோசிப்பார் ரஜினி. ஆனால் இந்த முறை, ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை தட்டாமல், இந்த விழாவுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
விழாவுக்கு நடிகர் சங்கத் தலைவர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், எம்எல்ஏ சரத்குமார்தான் தலைமை வகிக்கிறார். நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி, நடிகர் வாகை சந்திரசேகர், நடிகர், இயக்குநர் பாண்டியராஜன், இயக்குநர் பி வாசு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்படும் கவர்ச்சி நடிகை நமீதா பங்கேற்கிறார். ரஜினிக்காக காலில் செருப்பணியாமல் நடிப்பேன், ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வேண்டாம் என்று கூறிவரும் நமீதாவுக்கு, ரஜினி விஷயத்தில் ஒரு சின்ன அங்கீகாரம் கிடைத்த திருப்தி இந்த விழா மூலம் கிடைத்திருக்கிறது.
-என்வழி ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்
திரையுலகின் மன்னன்…!ஸ்டைலின் குரு, அதை பின்பற்றும் சிஷ்யன்கள் பலர்..!
ஆறில் இருந்து அறுபது வரை வயது வேறுபாடின்றி உங்களை பற்றித்தான் பேச்சு..!
அறுபது கடந்தும் இன்றும் நீங்கள் உழைப்பாளி..!
ரசிகர் மனதின் தனிக்காட்டு ராஜா.. எம் அன்புக்கு நீங்கள் என்றும் அடிமை..!
முத்துப்போன்ற வெள்ளை மனம் கொண்ட ராஜாதி ராஜாவே எம் இதய தளபதி..!
அன்புள்ள ரஜனிகாந், நோயின் வலி கடந்து நிற்கும் நீங்கள் எந்திரன்..!
முதுமை உங்களுக்கு அல்ல..!
உங்களை சேர துடித்து களைத்து நிற்கும் அந்த முதுமைக்குதான் முதுமை…!
உலகில் வேறு எந்த நடிகருக்கும் வாய்க்காத ஒரு அபூர்வ பிறந்த தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாய்த்திருக்கிறது. இந்தத் தேதி வாய்த்தது முக்கியமல்ல… அது திரையுலகின் உச்சநட்சத்திரமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரஜினிக்கு வாய்த்ததுதான் முக்கியமானது.
கொண்டாடும் உலகம்
ரஜினியும் அவரது குடும்பத்தினரும் வேண்டுமானால் இந்த பிறந்த நாளை இன்று நள்ளிரவிலிருந்தோ, நாளை காலையிலிருந்தோ கொண்டாடலாம். ஆனால் உலகம்… டிசம்பர் முதல் தேதியிலிருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டது.
இதைப் படிக்கும்போது சற்று மிகையாகத் தோன்றலாம். ஆனால் அது முழுமையான உண்மை.
ரசிகர்கள்…
டிசம்பர் முதல் தேதியிலிருந்து தமிழகத்தில் உள்ள ரஜினியின் ரசிகர்கள் பல நல்ல காரியங்களை, நலத் திட்டங்களை தங்களால் முடிந்த அளவு செய்து வருகின்றனர். இலவச உடைகள் வழங்குகள், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்களுக்கு நிதியுதவி, பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி, ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைத்தல் என ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த 10 தினங்களாக கொண்டாட்டங்கள் அமர்க்களப்படுகின்றன.
மதுரையில் எங்கும் ரஜினிமயம்
ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் இந்த ஆண்டு பிரதான இடம் மதுரைக்கு என்றால் மிகையல்ல. அப்படி ஒரு தடபுடல் ஏற்பாடுகளை அந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். கடந்த 10 தினங்களாக நாளொரு பேனர், போஸ்டர், கட் அவுட்டுகள். மதுரை மாநகரின் கிட்டத்தட்ட அனைத்து ஆட்டோக்களிலும் ரஜினி அட்டகாசமாக சிரித்தபடி உலா வருகிறார்!
திருச்சி…
திருச்சியை ரஜினி ரசிகர்களின் கோட்டை என்பார்கள். ஆண்டுதோறும் ரஜினி பிறந்த மாதம் முழுக்க திருவிழாவாகத்தான் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அலகு குத்துதல், தேரிழுத்தல், தீச்சட்டி ஏந்துதல், பேரணி நடத்துதல் என நாளொரு அமர்க்களம் அரங்கேறும். இந்த ஆண்டு கேட்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு திருச்சி முழுக்க ரஜினி முத்திரையை பதித்து வைத்துள்ளனர்.
நலத்திட்ட உதவிகளுக்கும் குறைவில்லை. குறிப்பாக ஆதரவற்ற, மனநலம் குன்றிய மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தினசரி உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில்…
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, சென்னையில் ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமான பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 13-ம் தேதி நடக்கும் இதில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
குவியும் வாழ்த்துகள்…
ரஜினியின் இந்தப் பிறந்தநாளில் அவருக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒருநாள் முன்பாகவே அவருக்கு மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், கனடா, அமெரிக்காவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களில் சிலர் அந்தந்த நாட்டு அரசுகளில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு 12.12.12 ஒரு சூப்பர் நாள். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார்.
36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது. அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள்.
இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12. சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அந்த நினைவுகளோடு உலக ரசிகர்களும் பிந்த நாள் நிகழ்வில் இணைகிறார்கள்.
இதே நேரம் பயபுள்ள” படத்தின் பாடல் டிரைலர் வெளியீட்டு விழா 12.12.2012 காலை வடபழனி கமலா திரையரங்கில் நடக்கிறது.
கே.பாலசந்தர் இதில் பங்கேற்று ரஜினி பிறந்த நாளையொட்டி 63 கிலோ எடையுள்ள கேக் வெட்டுகிறார். ரஜினியை இயக்கிய டைரக்டர்கள் எஸ்.பி. முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக