நடிகர் அர்ஜூன் பிசியாக இருந்த காலகட்டத்தில் அவரிடம் கதை சொல்வதற்காக முன்னணி மற்றும் அறிமுக இயக்குனர்கள் என்று படையெடுத்த வண்ணம் இருப்பார்களாம். ஆனால் சமீபகாலமாக அவரது மார்க்கெட் டவுன் ஆனதைத் தொடர்ந்து ஒரு உதவி இயக்குனர்கூட அவர் வீட்டுப்பக்கம் வருவதில்லையாம். இதை தனது சினிமா
நண்பர்களிடத்தில் வேதனையுடன் சொல்லி வருகிறார் அர்ஜூன். ஆனால் இதுகுறித்து சில இயக்குனர்கள்தரப்பில் கூறும்போது, இப்போதும் அர்ஜூன் நல்ல நடிகர்தான். அவருக்கான கதைகள் பல டைரக்டர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவரிடம் கதை சொல்ல பயப்படுகிறார்கள் என்கிறார்கள்.
என்ன காரணம்? என்று கேட்டால், இன்றைய தருவாயில் அர்ஜூனை வைத்து படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர் பிடிப்பதே பெருங்கஷ்டம். ஆனால் அப்படி ஒரு தயாரிப்பாளரை ஓ.கே செய்து விட்டு, அவரிடம் கதை சொல்லச்சென்றால் அந்த தயாரிப்பாளரை மட்டும் கேட்ச் பண்ணி விட்டு, இயக்குனரை ஓரங்கட்டி விடுவார். பின்னர் அதே தயாரிப்பாளரை வைத்து தனக்கு பிடித்தமான முன்னணி இயக்குனர்களை வைத்து படம் பண்ணுவார். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செய்து வந்தார் அர்ஜூன். அதனால்தான் அதன்பிறகு அவரிடம் கதை சொல்லச்செல்லும் இயக்குனர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. அதுவும் இப்போது அவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. இந்த நேரத்தில் யாராவது அவர் வீட்டுப்பக்கம் செல்வார்களா? அப்படியே சென்றாலும், இவர்தான் தயாரிப்பாளர்களை தன் பக்கம் இழுத்து விட்டு, டைரக்டர்களை டீலில் விட்டு விடுவாரே? இந்த விசயம் தெரிந்த பிறகும் யாராவது அவர் வீட்டுப்பக்கம் செல்வார்களா என்ன? என்கிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக