புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெளிநாடு செல்பவர்களுக்கு முறையான சேவைகளை வழங்காத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்ய போவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற ‘நாட்டின் வீரர்கள் அமைப்பின்’ கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை அறிவித்தார்.

அண்மைக்காலமாக முறையாக ஒப்பந்தங்கள் இன்றி வெளிநாடுகளுக்கு பணியாளர்கள் அனுப்பப்படுவதன் காரணமாக வாழ்க்கையை இழக்கக் கூடிய சூழ்நிலையை இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் இலங்கையர்களின் குடும்பத்தினர் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் நாட்டின் வீரர்கள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜோர்தானில் பணிப் பெண்ணாகவுள்ள தனது மனைவியை இலங்கைக்கு மீண்டும் அழைத்துவருமாறு, கொழும்பு, ஹவலொக் கவர் வீதியிலுள்ள மரம் ஒன்றில் ஏறிகொண்ட ஒருவர் நேற்று போராட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top