புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வானத்தில் இருந்து விழுந்த நீலநிறப் பனிக்கட்டி ஒன்று தமிழகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டு- குண்டலபல்லி சாலையில் கள்ளிச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சக்தி (24) என்ற இளம்பெண், நேற்று காலை வீட்டு முன்
கோலம்போட சென்றார். அப்போது, வானத்தில் இருந்து நீல நிறத்தில் பனிக்கட்டி ஒன்று விழுந்தது.

 
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்தி குடும்பத்தினரிடம் கூறினார். இதுகுறித்து, தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியது. கிராம மக்கள் அங்கு திரண்டனர், சுமார் 50 கிலோவரை எடை கொண்ட அந்தப் பனிக்கட்டியை சிறுசிறு துண்டு களாக உடைத்து, எடுத்துச் சென்றனர்.

தகவல் காட்டுத்தீ போல பரவியதால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர். நீலநிற பனிக்கட்டி துண்டுகளை வியப்புடன் பார்த்தனர்.இதுகுறித்து, அந்த கிராம மக்கள் கூறுகையில், அந்த பனிக்கட்டியில் இருந்து ஒருவித வாசனை வீசியது. பிசுபிசுப்புடன் இருந்தது. தொட்டபோது நீலநிறம் கைகளில் ஒட்டிக் கொண்டது என்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top