இலங்கை வான்பரப்பில் அடிக்கடி அதிசய வெளிச்சங்கள் தோன்றுவதாகவும், மர்மப் பொருட்கள் வானில் ஒளிர்வதாகவும் கடந்த சில நாட்களாகப் பல செய்திகள் உலா வந்தவணம் உள்ளது யாவரும் அறிந்திருப்பீர்கள். இதனைப் பார்வையிட்ட மாணவர்களது கண்பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூட செய்திகள் வெளியாகியிருந்தது. இதனையடுத்து இலங்கையில், பல பாகங்களிலும் உள்ள மக்கள் பலர் அச்சத்தில் இருந்தார்கள். போதாக்குறைக்கு உலகம் 21ம் திகதியோடு அழியப்போகிறது என்ற கதைகளும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கும் அதற்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று மக்கள் நம்பி பெருங் குழப்பத்தில் இருந்தனர்.
ஆனால் இதற்கான சில விடைகள் கிடைத்துள்ளது. இதுவும் இராணுவத்தின் திரு விளைடாடல்களில் ஒன்றா என்ற சந்தேகங்கள் தற்போது கிளம்பியுள்ளது. காரணம் நேற்று முந்தினம், சிங்கள கிராமம் ஒன்றில் இவ்வாறான வெளிச்சம் ஒன்றைக் கண்டுள்ளார்கள் அந்த ஊர் மக்கள். காலையில் அவர்கள் அப்பகுதியில் தேடிப்பார்த்தவேளை, அவர்கள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது இராணுவம் பாவிக்கும், பரா லைட் வெளிச்சக் கூடு ஆகும். இதனை இலங்கை இராணுவம் இரவில் வான் பரப்பில் ஏன் ஏவுகிறது என்று தெரியாத நிலை காணப்படுகிறது. பரா லைட் (வெளிச்சக் கூட்டை) ஏவி, அதில் தோன்றும் பிரகாசமான வெளிச்சத்தில் இவர்கள் யாரைத் தேடுகிறார்கள் என்பது பெரும் மர்மமாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் சிங்களப் பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது
0 கருத்து:
கருத்துரையிடுக