தன்னை சாப்ட்வேர் என்ஜீனியர் என்று பொய்யாக கூறி பேஸ்புக் மூலம் மருத்துவ மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசி அவரை கடத்தி விட்டதாக ஆட்டோ டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாலினி. 17 வயதான இவர் பள்ளிக்கரணையியில் உள்ள பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பல் மருத்துவப் படிப்பை படித்து
வருகிறார். விடுதியில் தங்கியுள்ள இவருக்கு பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் இருந்தனராம். அதில் ஒருவர்தான் தியாகராஜன்.
சென்னையைச் சேர்ந்த இவர் தன்னை சாப்ட்வேர் என்ஜீனியராக மாலினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பழ்கி வந்தார். ஆனால் உண்மையி்ல இவர் ஏழாம் வகுப்பு வரையே படித்துள்ளாராம், ஆட்டோ ஓட்டி வருகிறார். சமீபத்தில் தனது விடுதியை விட்டு வெளியேறி விட்டார் மாலினி. தியாகராஜனையும் காணவி்ல்லை.
இதுகுறித்து மாலினியின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் தியாகராஜன் மீது போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக