க.பொ.த சாதாரணதரப் பரீட்சையினை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருந்த மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த ரி.வினோதினி (16) என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குச் தோற்றிய பின் வீட்டிற்கு திரும்பிய குறித்த மாணவி, வீட்டில் படித்துக் கொண்டிருக்க வீட்டார் வெளியில் சென்றுள்ளனர்.
மாலை நேரம் வீட்டார் திரும்பி வந்து பார்க்கையிலேயே இம் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக