இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில் சேலை அணிந்த நடிகை குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்று இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அவர் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.
அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று முத்து ரமேஷ் எச்சரித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக