ஆபாசக்கருத்துக்களால் ட்விட்டருக்கு குட்பை சொல்லிவிட்டார்-நடிகை ஸ்ரேயா!
கொள்கைகளை பரப்புவதற்கும் ரசிகர்களுடன் ஒரு இணைப்பு பாலமாக இருந்து வரும் சமூக வலைத்தளங்கள் சினிமாத்துறையில் இருப்போருக்கு பெரும்
பொக்கிஷமாக அமைந்துவிடுகிறது.அது போலவே தானும்
ட்விட்டரில் உறுப்பினராக சேர்ந்து பல கருத்துகளை வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வந்தார் ஸ்ரேயா.
ஆனால் சமீபகாலமாக அவரது அக்கவுண்ட்டை பின்தொடரும் ரசிகர்கள் தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களை ட்விட் செய்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியா வந்த இதுபோன்ற கருத்துக்களை எழுதிய ரசிகர்களை ஸ்ரேயா பலமுறை கண்டித்து அவர்கள் அடங்காமல் தொடர்ச்சியாக ஆபாசங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
இதனால் வெறுப்பின் உச்சத்துக்கே போன ஸ்ரேயா இனி ட்விட்டரே வேண்டாம் என்று முடிவு செய்து “ முட்டாள்தனமாக சிந்திக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் என்னால் தொடர்ச்சியாக ட்விட்டரை பயன்படுத்த முடியவில்லை” என்று கூறி ட்விட்டருக்கு நிரந்தமாக குட்பை சொல்லிவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக