புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டிப்பிடித்தால் ரத்த அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிப்பதாக வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் பிரியமானவர்களை கட்டிப்பிடித்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் நினைவாற்றலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாரைக் கட்டிப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தே நினைவாற்றல் அதிகரிக்கும். அவ்வளவாக பழக்கமில்லாதவரை கட்டிப்பிடித்தால் எதிர்மறை விளைவுகள் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரியமானவர்களை கட்டிப்பிடிப்பதால் பாசம் அதிகரிப்பதுடன் உங்களின் பர்சனாலிட்டியும் மென்மையானதாகிவிடுகிறதாம். பிரியமானவர்களை அடிக்கடி கட்டிப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நாளடைவில் பிறருக்காக அதிகம் இரக்கப்படுபவர்களாகிவிடுகிறார்களாம்.

இருவருமே பாசத்துடன் கட்டிப்பிடித்தால் மட்டுமே நல்ல விளைவுகள் ஏற்படுகிறதாம். தெரியாதவர்கள், நெருக்கமில்லாதவர்கள் தேவையில்லாமல் கட்டிப்பிடித்தால் டென்ஷன் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top