புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டொரண்டோ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின் போது பெண் நோயாளிகளிடம் George Doodnaught  என்ற மருத்துவர் முறைகேடாக நடந்து கொண்டுள்ள தற்போது நீதிமன்றத்தில்
விசாரிக்கபப்ட்டு வருகிறது.

64 வயதாகும் மருத்துவர் George Doodnaught மீது இதுவரையிலும் 21 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த2006 முதல் 2010வரையிலான காலகட்டத்தில் 21 பெண்கள் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியதால் இவர்  கைது செய்யப்பட்டார்.


நேற்றைய விசாரணையின் போது 41 வயதுள்ள பெண்மணி ஒருவர் நீதிமன்றில் சாட்சியமளித்தார். அறுவை சிகிச்சையின் போது உணர்ச்சியற்ற நிலையில் இருந்த தன்னுடைய மார்பகத்தை யாரோ பிடித்து இருந்தது போல இருந்ததாகவும், கண்விழித்து பார்த்தபோது மருத்துவர்தான் இந்த செய்கையை செய்தது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு பெண் நீதிமன்றத்தில் கூறுகையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முடிந்து கண் விழித்துப் பார்த்த போது மருத்துவர் தனக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்ததுடன் , தன ஆணுருப்பினை தன்னுடைய வாயில் வைத்து அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் நேற்றைய வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கண் விழித்துப் பார்த்த பெண்மணி ஆத்திரமுற்று மருத்துவரை விரட்டியதாகவும் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரை நீதிமன்றில் சாட்சியமளித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் அனைவரும் இதே போன்ற குற்றச்சாட்டுக்களையே நீதிமன்றில் கூறியுள்ளனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்கிறார் மருத்துவர்.
வழக்கு விசாரணை தொடர்ந்து இன்றும் நடைபெறும் எனத் தெரிகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top