நுகேகொட பகுதியில் நாலு பேர் கொண்ட கும்பலினால் பெண் பலாத்காரம்
நான்கு பேர் கொண்ட குழுவினரால் நுகேகொட, விஜயராம பகுதியில் 47 வயதுப் பெண்மணி பாலியல் வண்புனர்விற்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
ஆங்கம பகுதியிலிருந்து தன்னுடைய ஆடை விற்பணை நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கொழும்பிற்கு விஜயம் செய்த பெண்மணி வழிதெரியாது விஜயராம சந்தியில் இரவு 7.30 மணியளவில் இறங்கியுள்ளார்.
அருகிலிருந்த முச்சக்கர வண்டி சாரதிகளிடம் தன்னுடைய ஊருக்கு செல்வதற்கான வழியினைக் கேட்டபொழுது முச்சக்கர வண்டி சாரதியும் மேலுமொரு நபரும் பலவந்தமாக இப்பெண்ணை வண்டியில் ஏற்றி பாலியல் வண்புணர்விற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
119 எண்ணிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் 28, 48 வயதினையுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் மேலும் இரு சந்தேகநபர்களை விரைவில் கைது செய்துவிடுவதாகவும் மிரியான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்ப்ட்ட பெண் தற்பொழுது மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக