புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற 9 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியரொருவர்.
இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இவ்வனர்த்தம் கோப்பாய் வடக்கு இலகடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இராசதுரை திருவானந்தத்தின் மூன்றாவது மகனான கயலக்ஷன் என்ற பாடசாலைசாலை சிறுவனுக்கே ஏற்பட்டள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுவனுக்கு காலில் ஒரு கட்டி வளர்ந்துள்ளது. இதனை அவதானித் தாயார் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மகனைக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.


இதன்போது உடனடியாகவே பிள்ளையை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வைத்தியார் ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிள்ளைக்கு அன்றே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை முடிந்ததும் சத்திரசிகிச்சை கூடத்திலிருந்து வெளியே வந்த பிள்ளையைக் கண்ட தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிள்ளைக்கு இடது காலில் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சைக்கு பதிலாக வலது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருந்தும் கட்டப்பட்டிருந்தது. இதனை அவதானித்த தாயார் சத்தமிடவே சுதாகரித்துக் கொண்ட தாதியர்கள் விடயத்தை அறிந்து பொறுப்பு வைத்தியரிடம் விடயத்தை தெரிவு படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு குறித்த வைத்தியர் வந்ததும் தனது சிஷ்யனின் செயலால் மனமுடைந்து மிகவும் வேகமாக செய்ய வேண்டிய இடது கால் சத்திரசிகிச்சையை மீண்டும் செய்து உடனடியாகவே வைத்தியசாலையிலிருந்து அவசர அவசரமாக வீட்டிற்கு சிறுவனை அனுப்பி வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது நடந்து செல்ல முடியாத நிலையில் வீட்டில் வசிக்கின்றார். ஆனால் இவரது கால்கள் இன்னமும் சில கிழமைகளில் குணமடைந்து விடும் நல்ல செய்தியாகும்.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக அதிகளவான மருத்துவ தவறுகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top