புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் இதயத்திற்கு நல்லது என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதிக கொழுப்பு மிக்க உணவுப்பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உடல் நலத்துக்கு கேடு
ஏற்படும், இதயம் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் அவற்றை சீரமைக்க சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் நலம் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகையில், கொழுப்பு சத்துமிக்க உணவுப்பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள டிரைகிளை செரிட்ஸ் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அதிகரிக்கின்றன.

இதுவே இதயநோய்கள் உட்பட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கிறது.

எனவே சாப்பிட்டவுடன் சுமார் ஒரு மணி நேரம் நடப்பது போன்ற உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் ஏற்படும் கொழுப்பு, டிரைகிளை செரிட்ஸ் அளவு குறைகிறது.

இதன் மூலம் இதயம் பாதிப்பிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top