கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சிறுவர்களை பாலியல் தொந்தரவு செய்த கோவில் பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே காட்டாக் கடையில் ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த பத்மனா பன்போற்றி (வயது 24) என்பவர் பூசாரியாக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் காட்டாக்கடை பகுதியில் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது இவரது அருகே 14 வயது மதிக்கத்தக்க ஒரு பள்ளி சிறுவன் அமர்ந்து பயணம் செய்தான். திடீரென்று அந்த சிறுவன் கூச்சல் போட்டான்.
உடனே அந்த பேருந்தில் பயணம் செய்த அந்த சிறுவனின் உறவினர்கள் என்ன என்று விசாரித்தப்போது, பூசாரி பத்மனாபன்போற்றி அந்த மாணவனுக்கு "செக்ஸ்" தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பத்மனாபன் போற்றிக்கு தர்ம அடி கொடுத்தனர். அதன் பிறகு அவரை காட்டாக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த தகவல் ஊருக்குள் பரவியதும் மேலும் 3 பள்ளி சிறுவர்களின் பெற்றோர் போலீஸ் நிலையம் சென்று தங்கள் பிள்ளைகளிடமும் பூசாரி பத்மனாபன்போற்றி மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தனர். சிலர் பாதிக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து பத்மாபன்போற்றியை போலீசார் கைது செய்தனர்.