நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கிவரும் படத்துக்கு, "தலைவா என, பெயர் வைத்த தகவல் வெளியானதுமே, பரபரப்பு கிளம்பி விட்டது. "இது, முழுக்க
முழுக்க அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். விஜய் அரசியலில் குதிப்பதற்கு வெள்ளோட்டம் பார்க்கும் வகையில், இந்த படம் தயாராகிறது என, தகவல்கள் கசிந்தன.
ஆனால், இந்த தகவலை, விஜய் தரப்பு, மறுத்துள்ளது. "தலைவா என, பெயர் வைத்துள்ளதால், இது, அரசியல் படம் என, கருதக் கூடாது. இந்த படத்தில், அரசியல் எதுவும் இல்லை. விஜயின் இமேஜுக்கு பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்பதால், இதை வைத்திருக்கிறோம்.
மற்றபடி, நோ பாலிடிக்ஸ். வழக்கமான விஜய் படத்தில் இருக்கும் அம்சங்களுடன், வித்தியாசமான விஷயங்களும், இந்த படத்தில் இருக்கும் என்கிறது விஜய் வட்டாரங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக