புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமது மகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியோருக்கு ஷரி-ஆ சட்டத்தின்படி தாம் மன்னிப்பை வழங்குவதாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்ட மூதூர் ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

அப்பாவியான தமது மகள் ரிசானா பிழையான முறையில் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

ரிசானாவினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோர், ரிசானாவை மன்னிக்கவில்லை என்றும் இதன்காரணமாகவே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் சவூதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இஸ்லாத்தின் ஷரி-ஆ சட்டத்தின்படி, தமது மகளுக்கு மன்னிப்பு வழங்காத குறித்த சவூதி பெற்றோருக்கு தாம் மன்னிப்பை வழங்குவதாக ரிசானாவின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

ரிசானாவின் மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் சவூதி அரசாங்கம் தமக்கு எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை.

ஊடகம் மூலமே தாம் தமது மகளின் மரணதண்டனை நிறைவேற்றத்தை தெரிந்துக்கொண்டதாக ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
 
Top