புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவில் தனது நண்பருடன் இணைந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், 100 கசையடிகளையும் ஒருவருட
சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சவூதியில் வீட்டு சாரதியாக பணிபுரிந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்ற இலங்கையருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சவூதியின் உள்நாட்டு சட்டத்தை மீறியதோடு, குறித்த இலங்கைப் பணியாளர் இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சவூதி வீடொன்றில் இருந்த தனது பெண் உறவினரை சந்தித்து, பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றபோது தான் கைது செய்யப்பட்டதாக, பெரேராலாகே துங்கசிறி இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சிறையில் தடுததுவைக்கப்பட்டுள்ள இலங்கையரான துங்கசிறி, மன்னிப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் சவூதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் பதியத்தலாவ பகுதியைச் சேர்ந்த துங்கசிறிக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top