கொழும்பு நவலோக வைத்தியசாலையில் ஸ்கேன் செய்யும் போது இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புத்தினி கெளசல்யா என்ற 5 வயதான சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்கேன் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே 5 வயதான சிறுமி உயிரிழந்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
எனினும் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயந்த தர்மதாச குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பெற்றோர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளது.
களனி மாபிம பொது மயானத்தில் சிறுமியினது இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக