தூத்துக்குடியில் செல்போனில் பதிவாகியுள்ள மர்ம உருவ படத்தினால் ஆவி உலா வருவதாக வதந்தி பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தூத்துக்குடி துறைமுகத்தின் நுழைவு பகுதியில்
தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 14ம் தேதியன்று இரவு செல்போனில் அவரது நண்பர் படம் எடுத்தார். அதில் அவருக்கு படத்திற்கு பின்னால் மர்ம உருவம் ஒன்று அந்தரத்தில் நிற்பது போன்றும் பதிவாகியுள்ளது. இது சினிமாவில் வரும் ஆவி, பேய் உருவம் போல இருந்துள்ளது.
இந்த தகவல் மற்றும் படம் துறைமுகம் மற்றும் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் ஷிப்பிங் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் மத்தியில் பரவியது.
அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகியுள்ள நிலையில் அந்த செல்போன் படத்தில் பதிவாகியுள்ளது விபத்தில் இறந்த ஒருவரின் ஆவிதான் என்றும் கட்டுக்கதைகள் பரவியது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஊழியர்கள், தொழிலா ளர்கள், பணியாளர்கள், லாரி டிரைவர்கள் என அனைத்து தரப்பினரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த யுவராஜின் வீட்டாரும் அவரை அந்த பகுதியில் ஆவி உலாவுவதாக நம்பி, அங்கு வேலைக்கு செல்லவேண்டாம் என்று தடுத்துள்ளனர்.
இது குறித்து செல்போனில் டவுன்லோடு செய்து தரும் பணியில் உள்ளவர்களிடம் கேட்டபோது, ‘ இது முழுக்க கட்டுக்கதை. ஸ்மார்ட் மொபைல்கள் எனப்படும் நவீன வசதி கொண்ட மொபைல் போன்களில் போட்டோகிராபிக்ஸ் வேலைகள் செய்ய வசதியாக பல சாப்ட்வேர்கள் உள்ளன.
இதன்மூலம் இன்டர் நெட்டில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். கோஸ்ட் எபக்ட் என்ற ஆப்சனை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் இது என்றும் இது மேலை நாடுகளில் பிரபலமாக உள்ளது என்றும் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக