பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், சுனாமி தாக்கியதில், ஐந்து கிராமங்கள் அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்றுமுன்தினம், 8 ரிக்டர் அளவுக்கு
பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன.100க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின.
இந்த பூகம்பத்தை தொடர்ந்து, சுனாமி ஏற்பட்டது.5 அடி உயரம் கொண்ட, கடல் அலைகள், தீவுகளை தாக்கின.இந்த பூகம்பத்தினால், சான்டாகுருஸ் தீவில் உள்ள, ஐந்து கிராமங்கள் அழிந்தன. இதுவரை, ஒன்பது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால்,ஏராளமான மக்கள் மலை பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக