இந்த அழகான பூவுலகில் பிறந்துள்ள ஒவ்வொருவரின் மனதிலும் காதல் என்னும் அருமையான உணர்வானது வராமல் இருக்காது. காதல் என்பது இரு உள்ளங்களுக்கு இடையே தோன்றும் ஒரு அற்புதமான ஒரு உணர்வு. அந்த உணர்வானது ஒருவருக்குள் வந்துவிட்டால், அது
அவர்கள் மறையும் வரை அழியாது, மனதில் நிலைத்திருக்கும். ஏனெனில் ஒருவருக்கு காதல் வந்துவிட்டால், அதன் பின் அவர்கள் ஒரு வித்தியாசமான உலகில் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வருவார்கள். எனவே அந்த அற்புதமான காதல் செய்யும் உள்ளங்களுக்காக, காதலைப் போற்றும் வகையில், உலகம் முழுவதும் காதலர் தினம் என்னும் நாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய காதலர் தினம் பிப்ரவரி 14 நாள் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அந்த நாள் வருவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, ஒவ்வொரு வகையில் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சரி, இப்போது அவ்வாறு ஒரு வாரம் கொண்டாடப்படும் காதலர் தினத்தின், ஒவ்வொரு நாளையும் எப்படி சொல்வார்கள், அந்த நாளன்று என்ன கொடுப்பார்கள் என்று பார்ப்போமா!!!
பிப்ரவரி 7: ரோஸ் டே காதலர் வாரத்தின் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் ரோஸ் டே. இந்த நாளன்று காதல் செய்யும் காதலி/காதலனுக்கு ரோஜாப் பூக்களை கொடுக்க வேண்டும். அதிலும் காதல் என்றதும் நினைவுக்கு வரும் சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சிறந்தாக இருக்கும்.
பிப்ரவரி 8: ப்ரப்போஸ் டே இந்த நாளன்று தம் காதலன்/காதலியிடம் ´ஐ லவ் யூ´ என்று தங்கள் காதலை வித்தியாசமான முறையில் தெரிவிக்கலாம். அதிலும் அவ்வாறு தெரிவிக்கும் போது, அது அவர்கள் எதிர்பார்க்காத அளவு மற்றும் மறக்க முடியாத அளவில் இருந்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.
பிப்ரவரி 9: சாக்லெட் டே உலகம் முழுவதும் பிப்ரவரி 9 ஆம் நாள் சாக்லெட் டே கொண்டாடப்படும். இந்த நாளில் காதலன் காதலிக்கோ அல்லது காதலி காதலனுக்கோ, ஏதேனும் அவர்களுக்கு விருப்பமான சாக்லெட் வாங்கி கொடுக்க வேண்டும்.
பிப்ரவரி 10: டெடி டே பெண்களுக்கு டெடி பியர் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே பிப்ரவரி 10 நாள் கொண்டாடப்படும் டெடி டெ அன்று, காதலன் காதலிக்கு அழகான ஒரு பெரிய டெடி பியரை வாங்கிக் கொடுக்கலாம். குறிப்பாக அந்த டெடி பியரில் ´ஐ லவ் யூ´ என்று எழுதியிருந்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.
பிப்ரவரி 11: ப்ராமிஸ் டே இந்த நாளன்று அனைத்து காதலர்களும் தாங்கள் காதல் செய்யும் காதலன்/காதலியிடம், அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். சத்தியம் என்பது சிலருக்கு விளையாட்டுத் தனமாக இருக்கும். ஆனால் இந்த நாளன்று செய்யப் போகும் சத்தியத்தை மனதளவில் செய்து கொடுத்தால், சந்தோஷத்துடன், உங்கள் மீது அன்பு பெருகி, நம்பிக்கையும் அதிகமாகும்.
பிப்ரவரி 12: ஹக் டே பிப்ரவரி மாதத்தின் 12 ஆம் நாள் தான் ஹக் டே எனப்படும் கட்டிப்பிடி வைத்தியம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது காதலி அல்லது நண்பர்களை சந்தோஷத்துடன் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த கட்டிப்பிடி வைத்தியம் சிறிது நேரம் தான் என்றாலும், அந்த நேரத்தில் அன்போடு, அக்கறையோடு, எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்க வேண்டும்.
பிப்ரவரி 13: கிஸ் டே காதலர் வாரத்தின் ஏழாம் நாள் தான் கிஸ் டே எனப்படும் முத்த மழை பொழியும் நாள். இந்த நாளன்று நீங்கள் உங்கள் அன்பை முத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்தலாம். வட நாடுகளில் எல்லாம் காதலர்கள் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து, தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள். நீங்கள் எப்படி?
0 கருத்து:
கருத்துரையிடுக