அறையொன்றில் கேரள மாநிலம் பொன்னானியை சேர்ந்த முகம்மது ஹாரிஸ் என்ற வாலிபர் கடந்த மாதம் தங்கினார்.
சென்னைக்கு வேலை தேடி வந்த அவர் கடந்த 16ம் திகதி வெளியே சென்றார். பின்னர், அவர் திரும்பவில்லை. ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறையை திறந்து பார்த்தனர். ஒரு பை மட்டும் இருந்தது. அதிலிருந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டனர். அப்போது, அந்த தொலைபேசி இலக்கம் முகம்மது ஹாரிசின் நண்பருடையது என்பது தெரியவந்தது.
தகவலறிந்த ஹாரிசின் பெற்றோர் சென்னை வந்து மகனை தேடினார்கள். மத்திய ரயில் நிலையம் அருகே கூவம் ஆற்றில் மிதந்த வாலிபர் சடலத்தை, தங்கள் மகன்தான் என அடையாளம் காட்டி வாங்கிச்சென்று அடக்கம் செய்தனர். இந்நிலையில், இறந்ததாக கருதப்பட்ட முகம்மது ஹாரிஸ் பெங்களூரில் வசிப்பதாக அங்குள்ள மலையாள சமாஜத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது புகைப்படத்தையும் அனுப்பினர். அது தங்கள் மகன்தான் என அறிந்த பெற்றோர் உடனே பெங்களூர் விரைந்தனர். அங்கு முகம்மது ஹாரிசை கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர். பின்னர் அவரை கேரளாவுக்கு அழைத்து சென்றனர். முகம்மது ஹாரிஸ் உயிரோடு வந்ததால், கூவத்தில் மிதந்தது யார் என பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக