ஓபன் தியேட்டர்ஸ் மற்றும் மின்மேக்ஸ் மூவிஸ் சார்பாக மணி, எஸ்.தமிழினி தயாரிப்பில், அ.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படம், "வாய்மை".
கதாநாயகனாக சாந்தனு, நாயகியாக பானு நடிக்கும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு கவுண்டமணி நடிக்கிறார்.
மேலும் தியாகராஜன், ராம்கி, ஊர்வசி உட்பட பலர் நடிக்கும் இத்திரைப்படத்தில், கவுண்டமணி டாக்டர் பென்னியாக நடிக்கிறார்.
வாய்மை படத்தினைக் குறித்து இயக்குனர் செந்தில் தெரிவிக்கையில், ஒரு தப்பை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அவ்வாறு யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்பதற்காகவே யாரும் கேட்க மறுக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.
இதில் மனிதர்களின் உச்சபட்ச மனித நேயத்தை சொல்லி இருக்கிறேன். கவுண்டமணி படம் முழுவதும் வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக