பத்தரமுல்லை ஜயந்திபுர பகுதியில் வானத்தில் இருந்து கடந்த நாட்களில் மர்மப் பொருள் ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இம்மர்மப் பொருள் விண்கல்லாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ஆயினும் முறையான சோதனைகளுக்குப் பின்னரே திட்டவட்டமாக கூற முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்து உள்ளார்.
சுமார் 10 -20 கிலோ கிராம் எடை உடைய கல் போன்ற பொருள் இது. வீட்டு வளவு ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
இரவு இடி, மின்னலுடன் பெய்த அடை மழைக்குப் பின்னரே அதிகாலையில் குறித்த மர்மப் பொருள் வளவுக்குள் எப்படியோ வந்திருக்கின்றது என வீட்டு உரிமையாளர் கூறுகின்றார்.
இது விண் கல்லாக இருக்கின்ற பட்சத்தில் மனிதர், கட்டிடங்கள் மீது விழுந்திருந்தால் பாரிய சேதம் நேர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர் துறை சார்ந்த நிபுணர்கள்.
இருப்பினும் விண் கற்கள் விழுவது பூமி அழிவது போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியென மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை, இவை முற்றிலும் பிழையான கருத்துக்கள் என்றும் இவர்கள் சொல்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக