நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இரண்டு வயதான வாடகைக் குழந்தையைக் காட்டி பிச்சையெடுத்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பயணிகள் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து ரயில் பாதுகாப்பு பிரிவினராலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் முரணான பதில்களை வழங்கியுள்ளார். மேலும் குழந்தையை வாடகைக்கு பெற்றமை ஏற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த குழந்தை தற்போது ரயில்வே பாதுகாப்பிரிவினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக