மணித்தியாலத்துக்கு 90 மைல் வேகத்தில் வந்த ரயில் ஒன்று மோதியும் பெண் ஒருவர் சாகவில்லை என்றால் பாருங்களேன்.... சும்மா சறுக்கி நிலத்தில் விழுந்து தலை அடிபட்டு இறப்பவர்கள் கூட உண்டு.
ஆனால் இப்படி பாரதூரமாக அடிபட்டு இறக்காமல் பிழைத்த பெண் ஒருவரும் உள்ளார் என்றால் அதிசயம் தான் ! சீனாவில் எக்ஸியா லீ என்னும் 20 வயதுப் பெண் ஒருவர், போட்டோவுக்கு போஸ் கொடுக்க ரயில் தண்டவாளத்தில் உட்காந்து இருக்கார்.
ஆனால் ஓசை இன்றிவந்த ரயிலை அவரும் அவரைப் படம் எடுக்க நின்ற நபரும் கவனிக்கவே இல்லையாம். திடீரென ஏதோ சத்தத்தைக் கேட்ட புகைப்படப் பிடிப்பாளர் திரும்பிப் பார்த்தால் அங்கே மிகவும் அருகாமையில் ரயில் படுவேகமாக வந்துகொண்டு இருக்கிறது.
புகைப்படக் காரர் சுதாரித்துக்கொண்டு, உடனே எகிறிக் குதித்துவிட்டார். ஆனால் தண்டவாளத்தில் உட்காந்திருந்த பெண்ணுக்கு அப்போதுதான் மேட்டர் புரிந்தது , திடீரென எழும்ப முற்பட்ட அவரால் முடியவில்லை , இதேவேளை படு வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதி அவரை ஓரமாக எறிந்துள்ளது.
ஆனால் அவர் இறக்கவில்லை. அதிஷடவசமாக உயிர்தப்பிவிட்டார். குறிப்பாக இரயில் மிகவும் வேகமாக வரும்போது காற்றை கிழித்துக்கொண்டு(மற்றும் காற்றை) முன்நோக்கி தள்ளிக்கொண்டு தான் வரும்.
இந்த காற்றின் வேகத்தில் ஒருவேளை அவர் தூக்கியெறியப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் அவர் உயிர்பிழைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக