அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்டி வான்ஹார்ன் என்னும் 22 வயது பெண் ஃபேஸ்புக் மூலம் தனது குழந்தைகளை விற்க முயற்சித்ததால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தனது காதலனை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால்
குழந்தைகளை விற்க முயன்றது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் விற்பனைக்கு இருப்பதாக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டு இருந்த அந்தப் பெண், பத்து மாத பெண் குழந்தையை மட்டும் பெற்றால் ஐம்பதாயிரம் ரூபாய், இரண்டு வயது குழந்தையுடன் சேர்த்து பெற்றுக்கொண்டால் இரண்டு லட்சம் என்று அறிவித்தார்.
"30 நிமிடத்தில் வரக்கூடிய தூரத்தில் இருக்கும் சாலிசா என்னும் இடத்துக்கு வந்தால் குழந்தை மற்றும் அதனுடைய பொருட்கள் அனைத்தையும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நிரந்தரமாக பெற்றுக் கொள்ளலாம்" என்றும் மிஸ்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதன்படி அர்கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் குழந்தையை விற்பனை செய்ய விலை பேசிக்கொண்டிருந்த போதுதான் மிஸ்டி கைது செய்யப்பட்டார். தற்போது அவருடைய இரண்டு குழந்தைகளும் சேவை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்னர்.
0 கருத்து:
கருத்துரையிடுக