திருமணம் செய்து கொள்ள மறுத்த 17 வயது இளம்பெண்ணை தீ வைத்து எரித்துக் கொல்ல முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த நைனர் நிஷா என்ற அந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய அவரது தாய் பானு, மாப்பிள்ளை தேடியுள்ளார். திருமண தரகரான சனஉல்லா என்பவர், தமது உறவினர் மகனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு நைனர்நிஷாவை வற்புறுத்தியுள்ளார்.
இதனை ஏற்க நிஷா மறுத்ததால் ஆத்திரமடைந்த சனஉல்லா, நிஷா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நிஷா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிஷா மீது தீ வைத்த சனஉல்லாவை ஆர்கே நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ee
பதிலளிநீக்கு