புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அத்தை தான் பயன்படுத்தும் துப்பாக்கியை அங்கு வைத்து விட்டு பாத்ரூம் சென்று இருந்தார். அந்த துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில் சிறுவன் அந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது துப்பாக்கி விசையில் கைபட்டு வெடித்தது. இதனால் துப்பாக்கி குண்டு சிறுவனின் தலையில் பட்டு வெடித்தது. இதனால் பயங்கர அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கினான்.

உடனே அவனை ஹெலிகொப்டர் மூலம் வாண்டர் பிலிட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையைடுத்து அவன் உயிர் பிழைத்தான். உண்மையிலேயே இவன் அதிசய சிறுவன் தான்.

பூமியில் வாழும் குழந்தைகளில் மிகவும் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் மிக கொடுமையான சம்பவம் நடந்தும் உயிர் பிழைத்து இருக்கிறான் என்று மருத்துவர்கள் வியந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top