கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தவறான தொடர்பு வைத்திருந்த தனது அண்ணியை உறவினர்கள் இருவருடன் சேர்ந்து கத்தியால்
குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் இந்திராணி. 40 வயதாகிறது. இவரது கணவர் முருகன் 3 ஆண்டுகளுக்கு முன்பாக்க இறந்து விட்டார்.
இந்திராணிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.இவர்கள் மூவரையும் வெளியூரில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
வீட்டில் இந்திராணி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஒரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதுகுறித்து இந்திராணியின் கொழுந்தன் மாதேஷுக்குத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர் தனது உறவினர்களான சின்னப்பன் மற்றும் குமரேசன் ஆகியோருடன் இந்திராணியிடம் போய் சண்டை போட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில்,3 பேரும் சேர்ந்து இந்திராணியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்தார் இந்திராணி. உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாதேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக