புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பஸ் டிரைவர் ராம்சிங் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


இதையடுத்து குற்றவாளிகளில் 5 பேர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளி 18 வயதுக்குட்பட்டவன் என்பதால் அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங், நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராம்சிங்கின் பிரேத பரிசோதனை டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்றது. இந்த மரணம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மாஜிஸ்திரேட் மற்றும் ராம்சிங்கின் பெற்றோர் முன்னிலையில் இன்று சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முதல் கட்ட பரிசோதனையில் ராம்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், ராம்சிங்கின் சகோதரர், தனது அண்ணனின் உடலில் காயம்பட்ட தழும்புகள் இருந்ததாகவும், கழுத்தில் விரல் அடையாளங்கள் தெரிந்ததாகவும் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கரவுலி கிராமத்திற்கு ராம்சிங்கின் பிரேதம் கொண்டுச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


இந்தியாவில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளி தற்கொலை


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top