ஸ்ரீ க்ரீன் புரொடக்சன்ஸ் எம்.எஸ்.சரவணன் தயாரிப்பில் மாசாணி படத்தை இரு இயக்குனர்கள் கே.பத்மராஜா- எல்.ஜி.ஆர் இயக்கியிருக்கிறார்கள்.
மாசாணி என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் இனியாவை நடிக்க வைத்துள்ளார்கள்.
கொலிவுட்டின் சீனியர் நாயகர்களில் ஒருவரான ராம்கி நீண்ட இடைவேளைக்கு பின்னர் 'வெற்றி' என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேஸ்வரி என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் ரோஜா வருகிறார்.
கல்லூரி பட நாயகன் அகில், நாயகி சிஜாரோஸ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், பிளாக் பாண்டி, சரத்பாபு, உமா பத்மநாபன் மற்றும் பலர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்- ராஜகுரு, எடிட்டிங்- வி.டி.விஜயன், கலை- ஜோசப் பாபின், நடனம்- சுஜாதா, காதல் கந்தாஸ், எஸ்.எல்.பாலாஜி, நோபல் நிஸ்ஸி, ஸ்டன்ட்- லீன் மற்றும் பலர் பணியாற்றியுள்ளார்கள். படத்தில் வரும் ஐந்து பாடல்களுக்கு இளம் இசையமைப்பாளர் ஃபாசில் இசையமைத்துள்ளார்.
'மாசாணி படத்தில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வெற்றி என்ற கிராமத்து நாயகனாக வருகிறேன். வெங்கட் பிரபு சொன்ன பிரியாணி படத்தின் கதை எனக்கு பிடித்தது. அவர் கொடுத்த கதாப்பாத்திரத்தில் நான் பிரியாணியில் நடித்திருக்கிறேன் என்கிறார் ராம்கி.
0 கருத்து:
கருத்துரையிடுக