புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெண்கள் சிலரால் இயக்கப்பட்டு வந்த சூது நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு சூது விளையாடிக் கொண்டிருந்த ஆறு பெண்களும் இரு
ஆண்களும் மாதம்பே பொலிஸாரால்கைது செய்யப்பட்டுள்னனர்.

நேற்று (11) மாலை இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது குறித்த சூது நிலையத்தில் இருந்து இரு ஆண்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சூது நிலையத்தை நிர்வகித்துச் சென்ற 21 வயது யுவதியும் அடங்குகிறார்.

சூது விளையாடிக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்த பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் இன்று (12) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top