புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சக நண்பர் கடலில் மூழ்குவதனை வேடிக்கை பார்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர்  கடலில் மூழ்கியதனை மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்த்ததாகவும், காப்பாற்றச் சென்றவர்களை தடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச் செயலுடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆபத்தில் சிக்கிய இளைஞரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top