புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டெல்லி கற்பழிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் தற்கொலை செய்திருந்திருக்க முடியாது என்றும், அதை கொலையாகக் கருத வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.


டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவர் ராம் சிங் திகார்
சிறையில் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இது தற்கொலையல்ல கொலை என்கின்றார் அவரது தந்தை மாங்கே லால் சிங்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எனது மகன் தற்கொலை செய்யவில்லை. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியதுடன் சக கைதிகள் தன்னிடம் வலுக்கட்டாயமாக உறவு வைத்ததாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் அவரது கையில் பலத்த அடிபட்டது. அதனால் அவரால் தனது துணியை தூக்கு கயிறாக மாற்றியிருக்க முடியாது. ஒரு கையை வைத்து தூக்கு போட்டிருக்க முடியாது என்றார்.

ராம் சிங்கின் தாய் கல்யாணி தேவி கூறுகையில்,

கைது செய்யப்பட்டதில் இருந்து எனது மகனை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதனால் அவரது உடம்பில் ஏற்பட்ட தழும்புகளை என்னிடம் காட்டினார். அவர் தப்பு செய்துவிட்டார். அதை அவர் எங்களிடம் ஒப்புக் கொண்டார். கடவுள் கூட ஒரு குற்றம் செய்தால் மன்னிப்பார். ஆனால் அவருக்கு வருந்த வாய்ப்பளிக்கவில்லை என்றார்.

தனது கட்சிக்காரர் ராம்சிங்கின் மரணத்தை கொலையாகக் கருத வேண்டும் என்று வழக்கறிஞர் வி.கே. ஆனந்த் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், அவர் தற்கொலை செய்திருக்க முடியாது. நான் அவருடன் தினமும் தொடர்பில் இருந்தேன். அவர் தற்கொலை செய்திருந்தால் கடிதம் இருந்திருக்க வேண்டும். இது குறித்து சுதந்திரமான விசாரணை தேவை. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சிசிடிவி வீடியோ இல்லை. அவர் கடந்த 2 மாதங்களாக பல முறை கொடுமைப்பத்தப்பட்டார் என்றார்.


இந்தியாவில் ஓடும் பேருந்தில் மாணவி கற்பழிப்பில் குற்றவாளி மரணம் தற்கொலைதான்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top