புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட் நடிகரான ஆர்யா முஸ்லீம் மதத்தைச் சேர்ந்ததால் தனது அபிமானிகள் எவரையும் வீட்டிற்கு அழைத்தாலும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தி விடுவார்.

பிரபுதேவாவை விட்டு பிரிந்து வந்த நயன்தாரா, சென்னையிலுள்ள ஆர்யாவின் வீட்டில் தங்கியபோது தினமும் அவருக்கு தனது வீட்டில் இருந்தே அறுசுவை பிரியாணி செய்து அனுப்பினார் ஆர்யா.

தினமும் வேண்டாம் என்று நயன்தாரா மறுத்தால், தானே அந்த பிரியாணியை எடுத்து சென்று அன்புத் தொல்லை செய்வாராம்.

இதனால் என்னதான் ஆர்யாவுடன் தன்னை இணைத்து கிசுகிசுக்கள் பரவினபோதும், அவரது அன்பிலிருந்து விடுபட முடியாமல் திணறிப்போயிருந்தார் நயன்தாரா.

ஆனால், இப்போது அவருக்கு ஆர்யா வீட்டு பிரியாணி அடிக்கடி செல்வதில்லையாம். ஏதாவது பண்டிகை நாட்களில் மட்டும்தான் அனுப்பி விடுகிறாராம்.

மாறாக, இரண்டாம உலகம் படத்தில் தன்னுடன் நடித்த அனுஷ்காவுக்கு அடிக்கடி விசேடமாக செய்து அனுப்புகிறாராம்.

இப்படி தனது மேற்பார்வையிலேயே பிரியாணி செய்யும் ஆர்யா, அதை அனுஷ்கா தங்கியிருக்கும் உணவுவிடுதிக்கே சென்று பரிமாறுகிறாராம்.

அதை அனுஷ்கா மட்டுமின்றி அங்கு தங்கியிருக்கும் அவரது மொத்த குடும்பம் ருசித்து சாப்பிட்டு விட்டு, ஆர்யாவை வயிறார புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top