புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மராட்டிய மாநிலத்தில் 85 வயது பிச்சைக்கார மூதாட்டி ஒருவர், கோவில் கட்டுவதற்கு ரூ.1 லட்சம் பணத்தை நன்கொடையாக கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


புனேயில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிம்பள்கான் என்ற கிராமத்தில் பொதுமக்கள் ராமர் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக நிதி திரட்டுவதற்காக ஊர் மக்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது அங்கு வந்த லட்சுமி என்ற பிச்சைக்கார மூதாட்டி தானும் கோவில் கட்ட நன்கொடை தருவதாக கூறினார்.

அவரை ஏளனமாக பார்த்த பொதுமக்கள், 100 ரூபாயோ, 200 ரூபாயோ கொடுத்து விட்டு போ என்று கூறினர். ஆனால் அவர் ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

கணவர் இறந்ததில் இருந்து கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த அவர், பிச்சையாக கிடைக்கும் பணத்தை வங்கியில் சேமித்து வந்துள்ளார். அந்த பணத்தை கோவிலுக்கு வழங்கினார்.

நன்கொடை வழங்கிய லட்சுமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவிலில் அவரது பெயருடன் பெரிய பலகை வைக்கவும், கடைசி வரை அவரை கவனித்துக்கொள்ளவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.!!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top