புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கரூர் அருகே கோவில் திருவிழாவொன்றின்போது அருள் வந்து சாமியாடியதாக கூறப்படும் பெண்ணொருவர், அங்கிருந்த ரூ.2 இலட்சம் மதிப்புள்ள 35 மண் சிலைகளை போட்டு உடைத்து சின்னாபின்னமாக்கியுள்ளார்.


இதனால் கோபத்தின் உச்சிக்கே போன கோவில் நிர்வாகம் பொலிஸில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்பெண் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கரூர் மாவட்டம் மேல் ஒரத்தை என்ற ஊரில் புகழ்பெற்ற அன்னமார், பவனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி கடந்த ஒருவாரமாக திருவிழா நடந்து வருகிறது.

இதனால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, வந்த கீழ் ஒரத்தையைச் சேர்ந்த மலர்கொடி என்ற 40 வயதுப் பெண்ணுக்கு திடீரென அருள் வந்து விட்டதாம்.

இதையடுத்து பலத்த சவுண்டு கொடுத்தபடி சாமியாடிய அவர் கீழே படுத்து உருண்டுள்ளார்.

அப்போது, கோவிலில் பக்தர்கள் வேண்டுதலுக்காக கொண்டுவந்து சாமியின் முன்னாள் வைக்கப்பட்டிருந்த வர்ணம் பூசப்பட்ட, 35 மண் சிலைகள் கீழே தள்ளி, மலர்கொடி உடைத்தார்.

உடைக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு, இரண்டு இலட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்லமுத்துவின் மகன் கைலாசம் மலர்கொடி மீது வேலாயுதம் பாளையம் பொலிஸில் புகார் செய்தார்.

கோவில் சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து வேலாயுதம்பாளையம் பொலிஸார் மலர்கொடி மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top