இங்கிலாந்து நாட்டின் லண்காஷயர் பகுதியைச் சேர்ந்த மர்வான் ரஜகசி என்ற சிறுவன் தனது தந்தையுடன் லேக் மாவட்டத்தில் இருக்கும்
ஹெல்விலான் மலையில் 160 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபொழுது கால் தவறி பனிப்படர்ந்த சரிவில் கீழே உருண்டு விழுந்துள்ளான்.
அதைப்பார்த்த தந்தை, பதற்றத்துடன் கீழே இறங்கி வந்து மகன் இறந்து இருப்பானோ என்ற தவிப்புடன் தொட்டுப்பார்த்தபொழுது சிறுவன் சுய நினைவுடன் நன்றாக இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த 12 மருத்துவ பணியாளர்கள் அந்த பகுதிக்கு ஹெலிகொப்டர் மூலம் விரைந்து வந்துள்ளனர்.
இச்சிறுவனை பரிசோதித்த அவர்கள் கற்பாறைகளில் மோதி உருண்டு விழுந்தும் காலில் சிறிய காயத்துடன் அந்த சிறுவன் உயிர் தப்பியதை கண்டு வியந்துள்ளனர்.
இதுகுறித்து இச்சிறுவனின் தந்தை இம்தியாஸ் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே இந்த மலையில் ஏறி இருக்கிறோம். அதனால் அசம்பாவிதம் ஏதும் நிகழும் என்று எண்ணவில்லை.
மேலும் என் மகன் தவறி விழுந்தபொழுது அவனை இழந்துவிட்டேன் என்றே நினைத்தேன் . அவன் நன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக