புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 அண்ணன் தம்பிகள் 5 பேரை திரௌபதி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பற்றி இதிகாசமான மகாபாரதத்தில் படித்திருப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு பெண் 5
கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.சாந்தை இணையம்

அந்தப் பெண்ணின் பெயர் ரஜோ வர்மா. 21 வயதாகும் அவர் தனது 5 கணவர்களுடன் டேராடூன் அருகே உள்ள கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைக்கு தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லையாம்.

21 வயதான குட்டுதான் ரஜோ வர்மாவின் கணவர். நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்து திருமண முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் சில வருடங்களில் அவர்களின் சகோதரர்களான பாஜ்ஜூ வயது 32, சாந்த் ராம் வயது 28, கோபால் வயது 26, தினேஷ் வயது 26 ஆகியோரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ரஜோ வர்மா 18 மாதமான குழந்தையுடன் 5 கணவர்களுக்கும் சமையல் செய்து இல்லத்தரசியாக குடும்பம் நடத்தி வருகிறாராம். ஆனால் 5 பேரில் யார் அந்த குழந்தையில் அப்பா என்று தெரியாதாம்.

இது பழங்காலமுறை என்றும் கூறும் ரஜோ, தனது தாயார் அண்ணன் தம்பிகள் மூன்று பேரை திருமணம் செய்து கொண்டு மனைவியாக வாழ்ந்தார். தனக்கும் அதுபோல ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது.

எங்களுடைய ஒரே அறை கொண்ட வீடுதான். பெட் கிடையாது, தரையில்தான் படுத்து உறங்குவோம். எங்களுக்குள் எந்த வித பொறாமையோ போட்டியோ கிடையாது என்கிறார் அந்தப் பெண். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சந்தேசாமாகவே வாழ்க்கிறோம் என்றும் கூறுகிறார் இந்த நவீன திரௌபதி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top