யாழில் கடனட்டையில் மூன்று கோடி நிதி மோசடி செய்த ஜோடி கைது
எ.ரி.எம் கடனட்டையின் தரவுகளை மாற்றி தனியார் வங்கியொன்றில் மூன்று கோடியே 28 லட்சம் ரூபா நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2012ம் வருடம் இடம்பெற்ற குறித்த நிதி மோசடி தொடர்பில் சந்தேகநபரும் அவரது கள்ள மனைவியும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக